படகுவிபத்தால் ஆத்திரமடைந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்  (லங்கா4.கொம் / Lanka4.com)

#Trincomalee
Prathees
4 years ago
படகுவிபத்தால் ஆத்திரமடைந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்  (லங்கா4.கொம் / Lanka4.com)

குறிஞ்சாக்கேணி பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக   தீர்வு வழங்கவில்லை எனக்கூறி முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட எழுவர் மரணமடைந்துடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை தோன்றியிருந்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் ஆவேசத்துடன் தாக்குதல் மேற்கொண்டு வீட்டைச் சேதரப்படுத்தியுள்ளதுடன் பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4