பெண்ணொருவரின் மூன்றரை கிலோ எடையுள்ள மண்ணீரலை அகற்றிய வைத்தியர்கள் (லங்கா4.கொம் / Lanka4.com)

#Hospital
Prathees
2 years ago
பெண்ணொருவரின் மூன்றரை கிலோ எடையுள்ள மண்ணீரலை அகற்றிய வைத்தியர்கள் (லங்கா4.கொம் / Lanka4.com)

ஒருவரை அரிதாகவே தாக்கும் Myelofibrosis எனும் எலும்பு மஜ்ஜை நோயினால் பாதிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய்க்கு கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக குறித்த தாய்க்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கேகாலை கெஹல்வத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

கேகாலை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த ஜயவர்தன மற்றும் அவரது பணியாளர்கள் குழுவினால் இந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ய முடிந்துள்ளது.

காய்ச்சல், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சுமார் மூன்றரை கிலோ வரை வளர்ந்திருந்த  மண்ணீரல் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டது.

சராசரி மனிதனின் மண்ணீரல் சுமார் 150 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

மூன்றரை கிலோ எடையுள்ள அவளது மண்ணீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படாமல் இருந்திருந்தால்,அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!