சுகாதார ஊழியர்களின்  வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பம் (லங்கா4.கொம் / Lanka4.com)

#Protest
Prathees
4 years ago
சுகாதார ஊழியர்களின்  வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பம் (லங்கா4.கொம் / Lanka4.com)

தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்க உள்ளன. 

இன்று (24) காலை 07.00 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள பதவி உயர்வு முரண்பாடுகள், தாதியர் பட்டதாரிகளின் சம்பள வெட்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியாசாலை மற்றும் கொவிட் தொடர்புடைய வைத்தியசாலைகளில் எவ்வித பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4