கிண்ணியா படகு  விபத்துக்கான காரணம் என்ன? பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல் (லங்கா4.கொம் / Lanka4.com)

#Trincomalee
Prathees
2 years ago
கிண்ணியா படகு  விபத்துக்கான காரணம் என்ன? பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல் (லங்கா4.கொம் / Lanka4.com)

திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் நேற்று காலை விபத்துக்குள்ளானதில் மரணித்த ஆறுபேரில்இ இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று காலை 7.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த படகில் 30 பேரளவில் பயணித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

அவர்களில் 30 வயது தாயும், அவரது 6 வயது மகனும், ஒன்றரை வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மற்றும் 8 வயதுடைய சகோதரிகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், பழைய பாலத்திற்குப் பதிலாக, களப்பு பகுதியில் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பீப்பாய்கள் மற்றும் பலகை என்பனவற்றைப் பயன்படுத்தி குறித்த மிதப்புப்பாலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மிதப்பு பாலத்தின் இரு பகுதிகளும், கம்பிகளின் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச மக்கள் தமது அன்றாட பயண நடவடிக்கைகளுக்குக் குறித்த மிதப்பு பாலத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதில் 20 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதுடன்இ அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார்முக்கிய விடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!