செயற்கை உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி! (லங்கா4.கொம் / Lanka4.com)

Reha
4 years ago
செயற்கை உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி! (லங்கா4.கொம் / Lanka4.com)

இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படப்பட்ட செயற்கை உர இறக்குமதிக்கு தடை விதிக்கும் வர்த்தமானி இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் செயற்கை உரத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யாது எனவும் செய்கை உர நிவாரணத்தையும் அரசாங்கம் வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பசுமை விவசாயமே அரசாங்கத்தின் கொள்கை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4