புதையல் தோண்டிய நால்வர் சிக்கினர்! (லங்கா4.கொம் / Lanka4.com)

Reha
4 years ago
புதையல் தோண்டிய நால்வர் சிக்கினர்! (லங்கா4.கொம் / Lanka4.com)

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலனறுவை, அரலங்கவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேஹெரகமவில் அப் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 26, 38, 59 வயதுகளையுடையவர்களே நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4