கிண்ணியா மிதப்புப் பால விபத்து தொடர்பில் 3 பேர் கைது! லங்கா4.கொம் / Lanka4.com

Reha
4 years ago
கிண்ணியா மிதப்புப் பால விபத்து தொடர்பில் 3 பேர் கைது! லங்கா4.கொம் / Lanka4.com

திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம்  விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய இருவரும், அதன் உரிமையாளருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலை 07.00 மணியளவில் பாடசாலைகள் மாணவர்கள், முதியோர் மற்றும் தொழிலுக்குச் செல்வோர் என சுமார் 20 இற்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

கிண்ணியா குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருவதால், குறித்த பகுதியூடாகப் பயணிப்பதற்கு தற்காலிகமாக இந்த களப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 7.30 மணியளவில் படகு கவிழ்ந்த போதிலும் நேற்று பகல் 1 மணி வரையும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4