கா.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை சந்தித்த பிரதமர்! லங்கா4.கொம் / Lanka4.com

Reha
2 years ago
கா.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை சந்தித்த பிரதமர்! லங்கா4.கொம் / Lanka4.com

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி பெற்று நாட்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஐந்து மாணவ மாணவிகள் மற்றும் வரலாற்றில் முதல் தடவையாக 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்ற விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.

க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சையில் சிறப்பு பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் பிரதமர் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், அவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றிபெற தமது வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தின்போது கலந்து கொள்ளாத ஒன்பது பாடங்களிலும் விசேட சித்தி எய்திய பிறப்பிலேயே உடல் உபாதைகளை கொண்ட மாத்தறை, பம்பரெந்த சத்தர்மராஜ மஹா வித்தியாலயத்தின் தெவ்மி ரன்சாரா ராஜபக்ஷ மாணவியும் இதன்போது நினைவுகூரப்பட்டார்.

மேலும் இந்த சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, பிரதமரின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!