இலங்கையில் 518 பேருக்கு கொரோனா தொற்று

#SriLanka
Prasu
4 years ago
இலங்கையில் 518 பேருக்கு கொரோனா தொற்று

இன்று (24) மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,205 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 401 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,929 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4