24 பாடசாலைகளில் கொவிட் தொற்று

#Covid 19 #Student
Prathees
2 years ago
24 பாடசாலைகளில் கொவிட் தொற்று

இம்மாதம் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான கடந்த 10 நாட்களில் தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட 24 பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் உட்பட 49 பேர் கொவிட்  தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 30 மாணவர்கள் அடங்குவர்.

அத்துடன் மொரவக வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனைகளில் புதிதாக 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் ஆபத்தான நிலை  ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் சுகாதார முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

“கடைகளில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை அனுமதிக்குமாறும் சுகாதாரம் நடவடிக்கைகளைப் பின்பற்றாமல்  கடைகளுக்குச் செல்வது ஆபத்தை அதிகரிக்கிறது எனவும் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!