படகு கவிழ்ந்த சம்பவம்: சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

#Trincomalee #Police #Court Order
Prathees
4 years ago
படகு கவிழ்ந்த சம்பவம்: சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

கிண்ணியாவில் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இரண்டு நடத்துநர்கள் மற்றும் படகு உரிமையாளர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாங்கேணி குளத்தை கடக்கும்போது படகு கவிழ்ந்ததில் நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4