கோடிக்கணக்கான பணத்துடன் விமான நிலையத்தில் நபரொருவர் கைது

#Arrest #Airport
Prathees
4 years ago
கோடிக்கணக்கான பணத்துடன் விமான நிலையத்தில் நபரொருவர் கைது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள டுபாய்க்கு அமெரிக்க டொலர்கள் மற்றும் இலங்கை நாணயங்களை கடத்த முற்பட்ட பயணி ஒருவர் நேற்று (23) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் வசம் இருந்த ஒருகோடி நாற்பது லட்சத்து அறுபதாயிரம் பெறுமதியான 20000 அமெரிக்க டொலர் மற்றும்  10 மில்லியன் இலங்கை நாணயம்  கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் பயணப் பொதிகளில் மிகவும் கவனமாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொழும்பு புறநகர் பகுதியில் வசிக்கும் 27 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நோக்கிச் செல்லும்  விமானத்தில் செல்வதற்காக அவர் நேற்று அதிகாலை 02.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் தனது கைப்பையில் 10 மில்லியன் ரூபா மற்றும் 20,000 அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருந்த போது சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4