10 நாடுகளுக்கு ஜோ பைடன் அழைப்பு – சீனா புறக்கணிப்பு!

Keerthi
4 years ago
10 நாடுகளுக்கு ஜோ பைடன் அழைப்பு – சீனா புறக்கணிப்பு!

ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனா, தாய்வான் போன்ற நாடுகளுக்கு ஜோ பைடன் அழைப்பு விடுக்கவில்லை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பீஜிங்கை மேலும் கோபப்படுத்தும் சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் டிசம்பர் 9 தொடக்கம் 10ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட இணையவழி மாநாட்டில் இஸ்ரேல் மற்றும் ஈராக் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகள் என்ற வகையில் பங்கெடுக்கும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

அமெரிக்காவைப் போலவே நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கியும் பங்கேற்பாளர்களின் பட்டியலில் இணைக்கப்படவில்லை.

மேலும் அமெரிக்காவின் பாரம்பரிய அரபு நட்பு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்தான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4