மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Reha
4 years ago
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் கண்டி, மாத்தளை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் அபாய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4