உங்கள் ஊரில் மாங்காய் மட்டன் சமைத்ததுண்டா?
#Cooking
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்:
- மட்டன் – 1/2 கிலோ
- கிளிமூக்கு மாங்காய் – 1 (சிறிய துண்டாக நறுக்கியது)
- சோம்பு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- சாம்பார் வெங்காயம் – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 3
- பச்சை மிளகாய் – 2 (கீறியது)
- தேங்காய் – 1/2 மூடி துருவியது
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- தனியா – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி – சிறிதளவு
- பூண்டு – 4 பல்
- லவங்கம் – 2
- பட்டை – 2
- உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
- மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- ஒரு வாணலி யில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி,
- பூண்டு, பட்டை, லவங்கம் ஆகிய வற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும்.
- ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி மாங்காயை சேர்த்து வதக்கி வேக விடவும்.
- மாங்காய் வெந்ததும் வேக வைத்த மட்டன் மற்றும் மசாலாக் களை சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.
- மாங்காய், மட்டன் மசாலா வுடன் சேர்த்து வெந்து திக்கானதும் இறக்கவும்.
- இப்போது மாங்காய் மட்டன் ரெடி. நீங்களும் நாவுற சுவைத்துண்ணலாம்.