பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்கான உள்ளூர் பாதுகாப்பு உபகரணங்கள்

#Parliament #SriLanka
Prathees
4 years ago
பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்கான உள்ளூர் பாதுகாப்பு உபகரணங்கள்

பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பிற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்இ பாதுகாப்பு உபகரணங்களை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.

வான் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும்  ட்ரோன் செயல்பாட்டு அமைப்பு மற்றும்  பாதுகாப்பு தகவல் தொடர்பு சாதனங்களும்  அடங்கும்.

மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை வழங்கியமைக்காக கௌரவ சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறைக்கும் ஏனைய தேசியத் தேவைகளுக்கும் மேம்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களைத் தயாரித்து அதன் மூலம் தேசியச் செல்வத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4