தாய் தந்தையை கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தி தங்கையை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது 

#Abuse #Sexual Abuse #Court Order
Prathees
4 years ago
தாய் தந்தையை கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தி தங்கையை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது 

22 வயதுடைய சகோதரர் ஒருவர் தனது தாயையும் தந்தையையும் கொன்றுவிடுவதாக மிரட்டி, தனது பதினான்கு வயது சகோதரியை மூன்று வருடங்களாக கடுமையாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேக நபரை கம்பளை நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி ஷீனித் விஜேசேகர அவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர் கம்பளை, ரத்மல்கடுவ, ஹடிஷெல் பகுதியைச் சேர்ந்தவர்.

போதைக்கு அடிமையான இவரிடமிருந்து   14 வயது சிறுமி தினசரி துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் தற்கொலை செய்யும் நோக்கில் பேராதனை பாலத்தின் மீது ஆற்றில் குதிக்க முயற்சித்தபோது   முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவரை மீட்டு பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

22 வயதான இளைஞரின் மூத்த சகோதரரும் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளார். அவர் திருமணமாகி வேறு பகுதியில் வசித்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையிலோ அல்லது வேறு யாரிடமோ கூறினால்  கொலை  செய்துவிடுவதாக அச்சுறுத்தியதால் அது குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என  தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4