வடமராட்சியில் பஸ் மோதி பெண் படுகாயம்!

#Accident
Prasu
4 years ago
 வடமராட்சியில் பஸ் மோதி பெண் படுகாயம்!

யாழ்., வடமராட்சி, கரணவாய் தெற்கு - மண்டான் வீதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.

வாதரவத்தைப் பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது - 30) என்பவரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானார்.
 
படுகாயமடைந்தவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில், நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4