பெண்ணொருவரைக் கத்தியால் குத்திய முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!

#Arrest
Prasu
4 years ago
பெண்ணொருவரைக் கத்தியால் குத்திய முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!

கொழும்பு, அங்கொடை சந்திக்கு அருகில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரை முல்லேரியா பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த 32 வயது பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கொடை சந்திக்கு அருகில், பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சந்தேகநபர் குறித்த பெண்ணைக்  கூரிய கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4