ஆயுதங்களை காண்பிப்பதற்காக சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

#Police
Prathees
4 years ago
ஆயுதங்களை காண்பிப்பதற்காக சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸ் காவலில் இருந்த லுனுவிலகே லசந்த என்றழைக்கப்படும் டிங்கர் லசந்த என்ற நபர்  இன்று காலை களுத்துறையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த நபர் சன்ஷைன் சுத்தா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்   பிரதான சந்தேக நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடி சந்தேக நபரை  பொலிஸார் அழைத்துச் சென்ற போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4