இலங்கையின் இன்றைய காலநிலை எப்படி இருக்கும்?

#weather
Prathees
4 years ago
இலங்கையின் இன்றைய காலநிலை எப்படி இருக்கும்?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையின் கிழக்கே இன்னும் நீடிக்கிறது. இதன்காரணமாக நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் மற்றும் மத்திய மலைப்பாங்கான பகுதியில், குறிப்பாக காலை நேரத்தில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

ஏனைய இடங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்று வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வீசும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு திசையில் வீசும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோ மீற்றர் வரை காணப்படும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். மற்ற கடல் பகுதிகள் சில சமயங்களில் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அத்திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4