பிரித்தானியாவை கைப்பற்றும் கொரோனா வைரசின் ஆதிக்கம் கோடியத் தாண்டியது. அடுத்து நடக்கபோவது என்ன ?

#world_news #Covid 19 #UnitedKingdom
பிரித்தானியாவை கைப்பற்றும் கொரோனா வைரசின் ஆதிக்கம் கோடியத் தாண்டியது. அடுத்து நடக்கபோவது என்ன ?

உலகில் பலனாடுகளில் காலனனிலை குளிர்காலத்தை அண்டிக்கொண்டிருப்பதால், கொரனா வைரஸ் தனது அட்டகாசத்தை காட்ட இலவுகவாக இறுக்கிறது. 

சுவிற்சர்லா ந்து உட்பட பல நாடுகளில் பலர் இரண்டாவது கோவிட் 19 தடுப்பூசியை போட்டிருந்தும் பலர் போடாமலேயே பயத்தில் அல்லது அக்கறயீனத்தால் இருக்கிறர்கள். 

கொரோனா தொற்று பரவல் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது. இதேவேளை பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, போன்ற நாடுகளில் அதிகரித்துள்ளது. இதனால் இதைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 47,240 பேர் பாதிக்கப்பட்டதோடு 147 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 21 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 44 ஆயிரத்து 433 பேர் மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 இலட்சத்து 2ஆயிரத்து 99 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 928 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவில் 40,777 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 88 இலட்சத்து 74 ஆயிரத்து 965 பேர் குணமடைந்துள்ளனர்.
இ ந்த் நிலை மேலும் அதிகரிக்க வாஇப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் சுவிசிலும் அண்டிய நாடுகளிலும் அவசர நிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4