திருக்கோவில் பிரதேசத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
திருக்கோவில் பிரதேசத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டிய  11 பேரை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

நேற்று (25) இரவு குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள மலையில் கல்லுடைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மலைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் அலவாங்கு மண்வெட்டி மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4