பிரித்தானியாவுக்கும் பிரான்சிற்க்கும் இடையில் முறுகல் நிலை. காரணம் மற்ற நாட்டவர்களா? 

Reha
4 years ago
பிரித்தானியாவுக்கும் பிரான்சிற்க்கும் இடையில் முறுகல் நிலை. காரணம் மற்ற நாட்டவர்களா? 

ஆம்...
கொரோனா நிலையை வைத்து பல நாடுகளுக்கிடையில் சமாதானம் நிலவுகிறது. அவ்வேளையில் வறிய நாடுகளில் இருந்து வளர்முக நாடுகளுக்கு வேலைவாய்ப்பை காரணமாகக்கொண்டு அகதிகள் ஏதிலிகள் என்ற போர்வையில் பலர் வளர்முக நாடுகளுக்குள் புகுவதால், அங்கும் அதை ஒட்டியுள்ள நாடுகளுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. 

அவ்வகையில்,,, ஆங்கிலக் கால்வாய் ஊடாக தமது நாட்டுக்குள் பிரவேசித்த, புகலிடக் கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மீள அழைக்க வேண்டும் என்ற பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் சமூக வலைத்தளம் ஊடாக இந்தக் கருத்தினைப் பகிர்ந்திருப்பதன் ஊடாக மரணித்த 27 புகலிடக் கோரிக்கையாளர்களின் விடயத்தின் தீவிரத்தன்மையினை அவர் புரிந்து கொள்ளவில்லை எனவும், இம்மனுவல் மக்ரோன் குற்றம் சுமத்தியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பிரான்ஸ் தலைமையில் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி, மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியன பேச்சுக்களில் ஈடுபடவுள்ளன.

ஆனாலும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரித்தானியாவிற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அதனை பிரான்ஸ் மீளப் பெற்றுள்ளமையினால் மேலும் இராஜதந்திர ரீதியான முறுகல்கள் உருவாகியுள்ளன. 

ஐரோப்பிய ஒன்றிணைவு முறியடிப்பின் பின்னர் பிரித்தானியாவுக்கும் பிரான்ஸ் இற்க்கும் இப்படி நிலை நல்லதல்ல என அயல் நாடுகள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4