காஸ் சிலிண்டர்  வெடித்து உயிரிழந்த பெண் தொடர்பாக  பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சிக் தகவல் 

#Police
Prathees
4 years ago
காஸ் சிலிண்டர்  வெடித்து உயிரிழந்த பெண் தொடர்பாக  பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சிக் தகவல் 

பொலன்னறுவை வெலிகந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள  வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினால் எரியுண்டு 19 வயதுடையஇ திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பொலிஸார்   தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் தொடர்பில்  வெலிக்கந்த பொலிஸார் கருத்துத் தெரிவக்கையில்,

குறித்த பெண்ணின் மரணத்துக்குத் தற்கொலையே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

தீவிபத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கும் அங்கிருந்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (24) உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், அவர் தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்ததாக இறப்பதற்கு முன்னர் மருதானை காவல்துறையினருக்கு மரண வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4