வெடிபொருட்களுடன் ஒருவர் சிக்கினார்! 

#Arrest
Prathees
4 years ago
வெடிபொருட்களுடன் ஒருவர் சிக்கினார்! 

தம்புள்ளையில் வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகொல்ல பிரதேசத்தில் தம்புள்ளைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, அனுமதிப் பத்திரமின்றி 8 கிராம் 710 மில்லிகிராம் அமோனியா, 9 வோட்டர் ஜெல் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 46 வயதுடைய கலேவெல பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4