பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய  குழுவினர் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய  குழுவினர் கைது

பொலிஸ் காவலில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கடந்த 17ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை பொலிஸார்  நேற்று (26) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஒருவர் பனாமுர பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் சந்தேகத்திற்குரியது எனவும், நீதியான விசாரணை தேவை எனவும் தெரிவித்து பனாமுர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்பிலிப்பிட்டிய, கொலன்னா, மித்தெனிய, ரஞ்சாமடம ஆகிய பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நேற்று எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பனாமுர  பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 21 முதல் 53 வயதுடையவர்கள் எனவும் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 200,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4