வர்த்தமானி தாமதமானதால் இரசாயன உர இறக்குமதியில் கடும் நெருக்கடி

#SriLanka
Prathees
2 years ago
வர்த்தமானி தாமதமானதால் இரசாயன உர இறக்குமதியில் கடும் நெருக்கடி

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (27) வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை இதனால் தனியார் துறை உர கம்பனிகள் இரசாயன உர இறக்குமதி தொடர்பில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.

இரசாயன உர இறக்குமதியில் யூரியா மற்றும் TSP உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், MOP எனப்படும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரசாயன உரங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை, அவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!