துறைமுகத்தில் தேங்கி இருக்கும் கொள்கலன்கள் குறித்து நடவடிக்கை - அஜித் நிவாட் கப்ரால்

Reha
4 years ago
துறைமுகத்தில் தேங்கி இருக்கும் கொள்கலன்கள் குறித்து நடவடிக்கை - அஜித் நிவாட் கப்ரால்

டொலர் பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கி இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் கொள்கலன்கள் இருப்பது குறித்த செய்திகளை பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்ததாகவும், இது தொடர்பாக தான் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவியதாகவும், ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்படி, டொலர் காரணத்தினால் கொள்கலன் துறைமுகத்தில் இருப்பின், அதுதொடர்பாக உடனடியாக மத்திய வங்கிக்கு அறிவிக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

அவ்வாறான நெருக்கடியொன்று ஏற்பட மத்திய வங்கி ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தற்போது பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வெளிநாட்டு கடனுக்கான தவணை கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் எந்தவித அச்சத்தையும் கொள்ள தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. இதற்கான விடயங்களையும் அவர் இதன்போது தெளிவுப்படுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4