யாழ். நாட்டுக்கோழிக் குழம்பு சமைப்பது எப்படி?

#Cooking
யாழ். நாட்டுக்கோழிக் குழம்பு சமைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • நாட்டுக்கோழி - ½ கிலோ
  • சின்ன வெங்காயம் - ¼ கிலோ
  • பூண்டு – 100 கிராம்
  • கொத்த மல்லி இலை – சிறிது
  • கறிவேப்பிலை – சிறிது
  • பச்சை மிளகாய் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு

அரைக்க:

  • தேங்காய் – 1 கோப்பை
  • சோம்பு – 2 தேக்கரண்டி
  •  கசகசா – 2 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 2 தேக்கரண்டி
  • சீரகம் – 2 தேக்கரண்டி

தாளிக்க:

  • பட்டை – 2
  • சோம்பு – ½ தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  1. அரைப்ப தற்காகக் கொடுக்கப் பட்ட பொருட்களை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாட்டுக்கோழி கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். சட்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி பட்டை, சோம்பு, உளுந்தம் பருப்பு இவற்றை பொரிய விடவும்.
  3. பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை இவற்றை நன்கு வதக்கவும். பின் நாட்டுக்கோழி கறியையும் சேர்த்து வதக்கவும். 
  4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அரைபதம் வெந்தவுடன் உப்பு மற்றும் அரைத்த மசாலாவையும் சேர்த்து வேக விடவேண்டும். 
  5. வெந்தவுடன் கொத்த மல்லி இலையைத் தூவி இறக்கி விடவும், சுவையான நாட்டுக்கோழி வெள்ளை மசாலா தயார்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!