நாட்டின் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும்- ஜனாதிபதி

Prabha Praneetha
4 years ago
நாட்டின் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும்- ஜனாதிபதி

நாட்டை முன்னேற்றுவதற்காக எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை  எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தீர்மானங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினாலும் எதிர்காலத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் அதன் பிரதிபலன்கள் கிடைக்குமென அவர் கூறியுள்ளார்.

நேற்று  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறுகியகால சிக்கல்களை வெற்றிகொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்க முடியும். ஆகவே அனைவரும்  நாட்டைப்பற்றி சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4