சம்பளத்தை அதிகரிக்க தற்போது பணம் இல்லை: பிரதமர்

#Mahinda Rajapaksa
Prathees
4 years ago
சம்பளத்தை அதிகரிக்க தற்போது பணம் இல்லை: பிரதமர்

சம்பளத்தை அதிகரிப்பதற்கும், கோரியபடி கொடுப்பனவு செய்வதற்கும் தற்போதைக்கு சாத்தியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரச நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே  பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாத்திரமன்றி பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில்இ இந்த நேரத்தில் பணத்தைக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது நியாயமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடு கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பினால், அனைவரின் பொருளாதார பிரச்சினைகளுக்கும் நிவாரணம் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

அதன்படி, நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அனைவரின் ஆதரவும் மிகவும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4