புதிய வகை கொவிட் வைரஸை அடுத்து பிரித்தானியா விமானத்தடை.....

#world_news #Covid 19 #UnitedKingdom
புதிய வகை கொவிட் வைரஸை அடுத்து பிரித்தானியா விமானத்தடை.....

தென்னாபிர்க்க புதிய உருமாற்ற கொரோனா வைரஸை அறிமுகத்தை அடுத்து பிரித்தானியா தமது விமானச்சேவைகளில் புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்  புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது. 

இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறனும் மிக குறைவாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால், உலக நாடுகள் கூடுதல் விழிப்புடன் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தெற்கு  ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 

மேலும், கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் பிரிட்டன் இணைத்துள்ளது. ஆகவே மேற்கூறிய இந்த 6 நாட்டு மக்களையும் வருகை தருவதாயின் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தல் செய்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4