வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு

Prabha Praneetha
4 years ago
வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா- நொச்சிமோட்டை, துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி, முதியவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் குறித்த முதியவர், தனது வீட்டிலிருந்து மரவள்ளி கிழங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார்.

இதன்போது முதியவர், அவரது தோட்டக்காணியில் சடலமாக கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் (வயது 69) என்ற முதியவரே  உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4