புதிய தென்னாபிரிக்க கொரோனா திரிபுக்கு “ஒமிக்ரான்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

#world_news #Covid 19
புதிய தென்னாபிரிக்க கொரோனா திரிபுக்கு “ஒமிக்ரான்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா திரிபு உருவாகி உள்ளமை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த கொரோனா திரிபுக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை வைத்திய நிபுணர்கள் வழங்கி இருக்கிறார்கள். இந்த புதிய திரிபு கொரோனா வைரஸுக்கு கிரேக்க மொழிப் பெயரான ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் பல தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன.

புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வருகின்றன.

தற்போது தென்னாபிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், தென்னாபிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரசுக்கு கிரேக்க மொழியில் ஒமிக்ரான் என மருத்துவ நிபுணர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசை 'கவலைக்குரிய வைரஸ் வகை என்ற பிரிவில் சேர்த்துள்ளனர்.

இந்த ஒமிக்ரோன் வைரஸ் மட்டுமல்ல ஏனைய திரிபுகளும் ஆபத்தானவை என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4