அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்ஸை நிறுத்தி இடம்மாறிய சாரதிகள் கைது

#Arrest
Prathees
4 years ago
அதிவேக நெடுஞ்சாலையில்  பஸ்ஸை நிறுத்தி இடம்மாறிய சாரதிகள் கைது

அதிவேக வீதியில் பேருந்துகளை நிறுத்திவிட்டு இடம்மாறிய சாரதிகள் இருவரை கைது செய்த  பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடங்கொட பரிவர்த்தனை நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதன்படி, சாரதிகள் இருவரும் மத்துகம பிரதான நீதவான் தம்மிக்க உடுவ விதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த சாரதிகள் இருவருக்கும்  தலா ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களை நீதவான் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தப் பேருந்துகள் கடவத்தையிலிருந்து அம்பலாங்கொடைக்கு பயணிக்கையில்,  தொடங்கொட பகுதியில் இரு சாரதிகளும்  பஸ்களில் இருந்து இறங்கியிருந்தனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4