பாடசாலைகளை மூட வேண்டாம்: அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த கர்தினால்

#School
Prathees
4 years ago
பாடசாலைகளை மூட வேண்டாம்: அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த கர்தினால்

மீண்டும் ஒருமுறை பாடசாலைகளை மூட வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேகாலையில் நேற்று (நவம்பர் 26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 தொற்றுநோய் காரணமாக பாடசாலைகளை மூடப்பட வேண்டியிருந்தது. எனினும் சக உறவுகளின் பற்றாக்குறை குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கிறது  என்று காகர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்கள்  இல்லாத நிலையில் குழந்தைகள் ஆன்லைனில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

அதன்படி, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு அதிகாரிகளிடம் கர்தினால் வேண்டுகோள் விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4