சிலிண்டர் வெடிப்புகள் குறித்து விசாரிக்க பொதுக்குழுவை நியமிக்குமாறு சஜித் கோரிக்கை 

#Sajith Premadasa #Parliament
Prathees
2 years ago
சிலிண்டர் வெடிப்புகள் குறித்து விசாரிக்க பொதுக்குழுவை நியமிக்குமாறு சஜித் கோரிக்கை 

எரிவாயு கசிவினால் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று முற்பகல் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரேமதாச, இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பொதுமக்களின் அச்சத்தைப் போக்க அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான விளக்கத்தை அளிக்க அரசு தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவங்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் என பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

எரிவாயு கசிவுகள் தொடர்பான சமீபத்திய தீ விபத்துகளுக்கு எரிவாயு நிறுவனங்களே காரணம் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன அண்மையில் வெளியிட்ட அறிக்கையையும் எதிர்க்கட்சித் தலைவர் மேற்கோள் காட்டினார்.

உள்நாட்டு சிலிண்டர்களின் புரோபேன் மற்றும் பியூட்டேன் விகிதத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக இந்த சம்பவங்கள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

12.5 கிலோ மற்றும் 18 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் கலவை குறித்து CAA மற்றும் உள்ளூர் நிறுவனத்தால் பெறப்பட்ட மூன்று அறிக்கைகளை மேற்கோள் காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் 

70:30 ஆக இருக்க வேண்டிய புரொப்பேன் மற்றும் பியூட்டேன் விகிதம் 50:50 ஆக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!