நந்திக் கடலில் மலர் தூவிய ரவிகரன்

Prathees
4 years ago
நந்திக் கடலில் மலர் தூவிய ரவிகரன்

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இராணுவத்தினருடைய கெடுபிடிக்கு மத்தியிலும் உயிர்நீத்த உறவுகளுக்கு அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4