இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து - எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு

Reha
4 years ago
இலங்கைக்கு ஏற்படப்போகும் ஆபத்து - எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் அடுத்த வருடம் இலங்கை மிகமோசமான உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

“இரசாயன உர இறக்குமதிக்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு, அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்நாடகத்தின் விளைவாக நாடு வெகுவிரைவில் உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையிலிருக்கின்றது.

இதன் பிரதிபலனை 2022 ஏப்ரல் மாதம் வரவிருக்கும் தமிழ், சிங்களப் புதுவருடப்பிறப்பின் போது நன்கு உணர்ந்துகொள்ளமுடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4