பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர் - கட்டளைத் தளபதி விளக்கம்

Reha
2 years ago
பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர் - கட்டளைத் தளபதி விளக்கம்

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்க கூறியுள்ளார்.

இன்று யாழ்.புத்தூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டவரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், இன்றைய மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.நகரில் ராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது. எனினும் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ராணுவத்தின் கடமையாகும்.

எந்த சூழ்நிலையிலும் நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு ராணுவத்தினர் ஆகிய நாங்கள் முன்னின்று செயற்படுவோம். அதனடிப்படையில் தற்போது பொலிஸாருக்கு உதவும் முகமாகவே ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு சட்டம் ஒழுங்கினை பொலிசார் நிலைநிறுத்துவதற்கு செயற்படுகிறார்கள். அவர்களுக்கு ராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவைப்படுமிடத்து இராணுவத்தினரும் களமிறக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!