நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 20 பேர் உயிரிழப்பு

#Covid 19 #Death
Prasu
4 years ago
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 20 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14278 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 561,059 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 528,806 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4