ஓமந்தையில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது!

#Sexual Abuse #Abuse
Prathees
4 years ago
ஓமந்தையில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் கைது!

ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 32 வயதுடைய உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியில் வசிக்கும் மாணவி திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (26) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு வைத்தியசாலை ஓமந்தை பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், மாணவியின் வாக்குமூலத்தின் பேரில்  32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் சிறுமியின் உறவினர் என்று கூறப்படுகிறது. சிறுமி விடுமுறை தினத்தில் வீட்டிற்கு வந்தபோது  சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் தொடர்பு கொண்டதாகவும் கர்ப்பத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4