இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறப்பு!

Reha
4 years ago
இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறப்பு!

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் மழையும் தொடர்கிறது. எனவே இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இன்று (28) அதிகாலை 6 மணிக்கு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு வான்கதவுகள் 6 அங்குலத்துக்கும், இரண்டு வான்கதவுகள் 12 அங்குலத்துக்கும் திறக்கப்பட்டுள்ளன.

எனவே இரனைமடு குளத்தில் கீழ் பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது .


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4