கணிசமான அளவு குறைந்துவரும் மரக்கறி விலைகள்!

Reha
4 years ago
கணிசமான அளவு குறைந்துவரும் மரக்கறி விலைகள்!

கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காய்கறிகளின் விலைகள் கணிசமான அளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட், லீக்ஸ் மற்றும் போஞ்சி ஆகிய மரக்கறிகள் 150 முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் குறிப்பிடப்பட்ட விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படவில்லை என மரக்கறிகளை கொள்வனவு செய்ய வந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கெப்பெட்டிபொல, நுவரெலியா ஆகிய பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தையிலும் மரக்கறி விலைகள் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4