பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்!

Reha
2 years ago
பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்!

ஆறுமுக நாவலர் பெருமானின் 192 ஆவது குருபூசைத் தினத்தை முன்னிட்டு பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுபூராகவும் அறநெறிப் பாடசாலைகளில் 100 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நூலகம் அமைக்கும் திட்டம் இன்று யாழ்ப்பணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இந்து மத விவகார அலுவலருக்கான இணைப்பாளர் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

ஆறுமுக நாவலர் பெருமானின் 200வது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முக்கிய அம்சமாக 192 வது குருபூசை தினத்தை முன்னிட்டு நாவலர் பிறந்த மண்ணில் இன்றைய தினம் இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதா நாத் காசிலிங்கம், நந்திக்கொடி அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் தனபாலா மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளனர். 

நாவலர் பெருமானின் அந்த புரட்சிகரமான சைவ சமயத்துக்கு அவர் ஆற்றிய பணிக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த வகையில் பிரதமரின் அறிவித்தலின் மூலம் 200 ஆவது நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அவர் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியீடு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் இலங்கை பூராகவும் நாவலரின் 200 ஆவது நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!