‘புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்தாது’ - பிரித்தானிய விஞ்ஞானி கருத்து!

Reha
4 years ago
‘புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்தாது’ - பிரித்தானிய விஞ்ஞானி கருத்து!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், பேரழிவை ஏற்படுத்தாது என பிரித்தானிய விஞ்ஞானி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான், பேரழிவை ஏற்படுத்தாது. எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், கொரோனா தடுப்பூசியால் கிடைக்கபெறும் நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். ஜலதோஷம், தலைவலி ஏற்படலாம்.

இதற்காக வைத்தியசாலைக்கு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகிற வாய்ப்பு அல்லது உயிரிழப்பதற்கான வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4