இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கவுள்ள  பொருட்கள் இவைதான்!

#prices
Prathees
4 years ago
இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கவுள்ள  பொருட்கள் இவைதான்!

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தின்பண்டங்கள் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளன.

இந்நிலையில்,  இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் இன்று (28) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளைய தினம் (29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4