கிண்ணியா படகு விபத்தில் மேலும் ஒரு மாணவன் பலி !! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

Prabha Praneetha
4 years ago
கிண்ணியா படகு விபத்தில் மேலும் ஒரு மாணவன் பலி !!  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து, குரிங்கன்கேணி தடாகத்தில் படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, கிண்ணியா குரிங்கன்கேணி தடாகத்தில் படகு கவிழ்ந்ததில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் நீரில் மூழ்கி 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபையின் தலைவர், உரிமையாளர் மற்றும் படகு நடத்துநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4