மகாவலி ஆற்றில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

#Death
Prathees
4 years ago
மகாவலி ஆற்றில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

கண்டி தென்னேகும்புர குருதெனிய பிரதான வீதியின் இலுக்மோதர பகுதியில் மகாவலி ஆற்றில் கவிழ்ந்த கார் இன்று பிற்பகல் 14 மணித்தியாலங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து ஆற்றில் விழுந்த காரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காரில் இருந்து காணாமல் போன 39 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் பெய்த கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து காரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4